தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு காலம் நிறைவடைவதையொட்டி, வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். சூழலுக்கு ஏற்ப கொரோனா பரவலை பொறுத்து மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 310-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகளில் 50% மேல் பார்வையாளர்களுக்கு […]