மத்திய அரசு பார்வையாளர்களின்றி மைதானத்தை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி […]
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளும் அளிக்கப்படும் எனவும், கொரோனா தொற்று அதிகமுள்ள 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும் எனவும் கூறினார். இந்நிலையில், மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் அனுமதி தேவையில்லை எனவும், வெளிமாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி பெறுவது கட்டாயம் என முதல்வர் அறிவித்தார். மேலும், அரசுப்பணி மற்றும் தனியார் நிறுவன வேலைகளுக்கு செல்ல அரசு / தனியார் […]
கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள 4ஆம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் கூடுதல் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும் எனவும், வேறு எந்த புதிய தளர்வுகளும் அளிக்கப்படவில்லை. அடுத்ததாக, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, […]