உளுந்தூர்பேட்டையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டோர் மாவட்டமாக சென்னை உள்ளது, மேலும் செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை, வேலூர், போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை சில தினங்களாகவே அதிகரித்து தான் வருகிறது, […]
திருப்பூர் மாவட்டத்தில் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் நடுரோட்டில் இளைஞர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தவர் முகிலன், இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார், இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஊரடங்கு அமலில் இருந்தத நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனங்களை பறிமுதல் செய்துகொண்டிருந்தனர், அப்பொழுது அங்கு வந்த […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாபாரியின் எடை இயந்திரத்தை தூக்கி வீசியதால் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் என்ற பகுதியில் வசித்து வருவபர் ராஜா இவர் குளிர்பானம் மற்றும் மளிகைக் கடை ஆம்பூரில் நடத்திவருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, மேலும் ஊரடஙகை மீறி நேற்று மாலை நேரத்தில் ராஜா தனது கடைகளை திறந்துவைத்தார். இந்நிலையில் உமராபாத் தலைமை காவலர் ரகுராமன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்குள் சென்று […]
சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், சென்னையில் 144 தடை உத்தரவு மே.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என காவல் ஆணையர் […]
கொரோனா வைரஸ் தொற்றைன் பரவலை கட்டுப்படுத்த மேற்கு வங்க மாநிலத்தில் வருகின்ற மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் அடுத்தடுத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, 4-ஆம் கட்டமாக மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் மகாராஷ்டிரம், தமிழகம் […]