மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில், வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை 9 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. இதனையடுத்து, விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர ஏற்பாடுகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, நாளை வேலூர், திருப்பத்தூர், […]
உள்ளாட்சி தேர்தலில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் எடப்படி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து முழுமையாக கவனம் செலுத்தி களப்பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சென்னையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை இதனால், சென்னை மாவட்ட அதிமுக […]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்த போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இது தொடர்பான அறிக்கையை 28-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.