மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில், சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர், உள்ளாட்சி ஒன்றிய தலைவர், துணை ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் 2 இடங்களில் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் வென்றுள்ளனர். தமிழ்கத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், துணை ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்வு […]
மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல். 10,306 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கி 3ஆம் தேதி நடைபெற்றது. 27 […]
மறைமுக தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது .அதில் அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணியே அதிக இடங்களில் கைப்பற்றியது. இதனையடுத்து நாளை மாவட்ட ஊராட்சி தலைவர் ,ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் வீடியோ பதிவை செய்யவேண்டும் […]
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த 25 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி தொடங்கி அடுத்த மறுநாள் மாலை வரை நடைபெற்றது. அப்போது சில வாக்கு சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 12 மாவட்டங்களில் இருந்த 25 இடங்களில் மட்டும் வாக்கு எண்ணிக்கை […]
தேர்தல் ஆணையம் வெளியிட்ட துணை வாக்காளர் பட்டியலில் இந்த வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட நான்கு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எர்ணாமங்கலம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் , பெரணமல்லுாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆணைபோகி ஊராட்சித் தலைவா் பதவிக்கும் , செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 19-வது ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி மற்றும் 26-வது மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர் வேட்பாளர் […]
திருவண்ணாமலை, திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முறைகேடு செய்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக திமுக சார்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் வெற்றி பெற்ற ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவியேற்க தடை விதிக்க கோரி திமுக சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கி அடுத்தமறுநாள் மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் […]
மக்களின் நம்பிக்கைக்குரிய இயக்கம் திமுக தான் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாளை அமையப்போகும் நல்லாட்சிக்கான முன்னோட்டம் என்றும் தெரிவித்துள்ளார். ”இன்று உள்ளாட்சி.. விரைவில் நல்லாட்சி!” – கழக தலைவர் @mkstalin அவர்கள் எழுதியுள்ள கடிதம். விவரம்: https://t.co/THKiOfv8n9#DMK #MKStalin pic.twitter.com/m2gOMDgBmC — DMK (@arivalayam) January 4, 2020 இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி மடல் எழுதியுள்ளார்.அவரது மடலில், […]
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. இதில் ஒரு வார்டு உறுப்பினர் பதவிக்கு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகளும் பெரும்பாலும் வெளியாகிவிட்டன. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழபுலியூர் சிலோன் காலனியில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளைச்சாமி என்பவர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக போட்டியிட்ட செல்வராஜ் […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்று பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் […]
வாக்கு எண்ணிக்கையிலும், வெற்றி அறிவிப்பிலும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறி வேட்பாளர் தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு. மாநில தேர்தல் ஆணையம் மற்றும் வேட்பாளர் பிரியதர்ஷினி பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை வருகின்ற 7-ம் தேதி ஒத்திவைத்தது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி என்பவரும் , தேவியை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் போட்டியிட்டார். நேற்று முன்தினம் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இருவரும் […]
27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியாகி விட்டன. இதில் ஊரக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அமமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சியில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக, திமுகவிற்கு எதிராக சுயேட்சையாக நின்று டிடிவி.தினகரன் வெற்றிபெற்றார். அதன் பிறகு நடந்த மக்களவை தேர்தலின் போது அமமுக எனும் கட்சியை தொடங்கி களமிறங்கினார். அதில் எந்த தொகுதியிலும் […]
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. இதில் ஊராட்சி ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் போட்டியில் தோல்வியடைந்த முருகேசன் என்பவர் போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டு விட்டன. இன்னும் ஒரு சில இடங்களில் சில காரணங்களால் முடிவு வெளியிடப்படவில்லை. இதில் மதுரை சேட்டம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதுவார்பட்டி ஊராட்சியில் 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டில் […]
ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கைக்கு இடையில் முறைகேடு நடப்பதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் மாவட்ட வாரியாக புகார் கொடுத்த நிலையில் இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து […]
நேற்று நள்ளிரவு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விஜயலட்சுமி 1,710 வாக்குகளும் , ஜெயலட்சுமி 2860 வாக்குகள் பெற்று இருந்தனர். ஆனால் விஜயலட்சுமி ஆட்டோ சின்னத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள். கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்று காலை நிறைவடைந்தன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குமணங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் ஜெயலட்சுமியும் , அவரை […]
தமிழகத்தில் நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி மற்றும் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக வெற்றிச்சான்றிதழ் கொடுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டார். நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னணி நிலவரம் […]
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவராக 10 வாக்குகள் மட்டுமே பெற்று ராஜலக்ஷ்மி என்பவர் வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 28 மணிநேரத்தை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சிவிளை ஊராட்சி […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன. ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மணிவேல் என்பவர் உடல் நலக்குறைவால் […]
தமிழகத்தில் ஊராக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊரான சேவூரில் திமுக பிரமுகர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 27 மணிநேரத்தினையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த தமிழக அறநிலையத்துறை […]
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி,காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சிகளுக்கு தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி,காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுடன் திமுக மற்றும் காங்கிரஸ் […]