ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல்கட்ட தேர்தல் அக்.6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட தேர்தல் அக்.9-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய […]
இன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தல் மற்றும் இதர […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவகியுள்ளது. 9 மாவட்டங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 129 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் காவலர்கள், ஊர்காவலர் படையினர், முன்னாள் ராணுவத்தினர் […]
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட காட்பாடி மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தினரை எம்.பி தொல்.திருமாவளவன் நேரில் ஆறுதல் கூறி மாணவி திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளார்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் உள்ள மைனஸ் மார்க் எனப்படுவது மாணவர்களை அச்சுறுத்துகிறது. நீட் தேர்வுக்காக 17 பேரை பலிகொடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு […]
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்தது மாநில தேர்தல் ஆணையம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 9 மாவட்டங்களுக்கான 92 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், […]
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நேருக்கு நேர் போட்டியிடும் மாமியார், மருமகள் ஒன்றாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவடைவதால் […]
அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பா் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக […]
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் […]
உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருக்கப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் […]