இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில்,நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்,இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என்று பேசினார்.
உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் […]
மாநில தேர்தல் ஆணையத்தின் மனு தீபாவளிக்கு பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது உச்சநீதிமன்றம். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 வாரங்கள் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் மனு தீபாவளிக்கு பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது. உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது உள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு, முன்பதிவு குறித்த அரசாணை அரசிதழில் வெளியிட்டுள்ளது.