தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கடந்த மாதம் 15 ஆம் தேதி தலைமைச் செயலர் அவர்களின் ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (PMEGP), வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம் (UYEGP), சிறுதொழில்கள் மற்றும் பெட்டிக் கடை […]