இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படு வரும்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டு இருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு, கறுப்பு கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையின் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்கள் சார்பில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் “எப்போது சுதந்திர தினம்” என குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளை பறக்க விட்டனர்.பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு […]