மார்ச் 21-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், மக்களின் கருத்துக்களை கேட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். […]
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் திமுக எம்எல்ஏ சரணவனன் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யும், புரட்டும் நிறைந்தது, மக்களை ஏமாற்ற கூடியது. ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொல்லிவிட்டு, ஒன்றும் தரவில்லை இப்பொது மக்களை ஏமாற்ற கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு […]
திமுக எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், திமுக ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று 500 வாக்குறுதிகளை கொண்ட திமுக தேர்தல் அறிக்கையும் முக ஸ்டாலின் வெளியிட்டார். இந்த வேட்பாளர்கள் தேர்வில் திமுகவில் சிலருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர். அந்தவகையில், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று இரவு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள், திருவண்ணாமலை, நாகர்கோவில், […]
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளுக்கான பாஜக தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை இடம் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 5-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 6 பேரின் முதற்கட்ட கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து கவலையோ, சந்தோஷமோ இல்லை. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில், தொடர்ந்து இழுபறி நீடித்து […]
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை வரவேற்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் பெங்களூரிலிருந்து தமிழகம் வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அவரை வரவேற்க வந்த தொண்டர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். இதனால் அரசியல் களம் இந்த முறை அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா திடீரென நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஒரு தாய் வயிற்றுப் […]
பாஜகவுக்கும், அதிமுக அமமுகவுக்கும் இணைப்பு தொடர்பான பேச்சுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் எல் முருகனிடம், அதிமுகவுடன் சசிகலா இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பாஜக நடத்தியதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, பாஜகவுக்கும், அவர்களுடைய (அமமுக, அதிமுக) இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என கூறியுள்ளார். அதிமுக – அமமுக இடையிலான விவகாரத்தில் பாஜக தலையிடும் கிடையாது என தெரிவித்துள்ளார். இது அதிமுக – […]
தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்று பாஜக மாநில எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே இழுபறி இல்லை என்றும் இரண்டு நாளில் தொகுதி பங்கீடு இறுதியாகும் எனவும் கூறியுள்ளார். கூட்டணியில் தேமுதிக நிலை பற்றி அதிமுகத்தான் முடிவு எடுக்கும் என்றும் முக ஸ்டாலின் சொல்வதை […]
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரையில், 2013, 2014-ஐ விட குறைவாக தான் உள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான பொது கோவையில் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைவதாகவும், தற்போது அவர் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான […]
நாராயணசாமியால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், முதல்வர் நாராயணசாமியால் தான் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது என்றும் காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, தென் மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றி தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை, ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளது. புதுச்சேரியில் […]
புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கூட்டணி பலம் 14 ஆகவும், எதிர்க்கட்சி கூட்டணி பலம் 14 ஆகவும் உள்ளது. இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதால் […]
Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பெட்ரோல், டீசல், […]
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிப்பு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம் எனவும் மாநில தலைவர் […]
விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், பாஜக – அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜக தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. எனவே மக்கள் செல்வாக்கு இருக்கும் நபர்களை தங்கள் கட்சியின் பக்கம் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் விஜயகுமார், நமீதா, கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில், நடிகர் சிவாஜி […]
சசிகலா தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் நான் கருத்து கூறுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வந்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து சசிகலா அறிவித்த பின்னரே அதிமுக கூட்டணியில் எந்த மாதிரியான தாக்கம் இருக்கும் என்பதை கூற முடியும் என்று தெரிவித்துள்ளார். அரசியல் கட்சியில் எல்லாருக்கும் வரவேற்பு கொடுப்பது வழக்கம்தான். இது ஒன்னும் […]
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கு, மெட்ரோ ரயில் மற்றும் சாலை பணிகளுக்காக பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் […]
நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்தடைந்தார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன. இதனிடையே நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் […]
பிரதமர் மோடிக்கு யாரும் திருக்குறள் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,எங்களது கூட்டணி உறுதியான கூட்டணி.இதை ஏற்கனவே எங்களது தேசிய பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.எங்களது கூட்டணி தொடர்கிறது.திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்பு உள்ளது.தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று எங்கும் சொல்ல முடியாது.பிரதமர் மோடிக்கு யாரும் திருக்குறள் […]