தேமுதிக துணைசெயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை நுங்கப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எல்.கே.சுதீஷூ அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது தேமுதிகவின் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து, இன்று ஒரே […]
பக்குவப்பட்ட அரசியல்வாதியாக எல்.கே.சுதீஷ் பேசவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய எல்.கே.சுதீஷ், நாங்கள் கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கைகளும் தராத காரணத்தினால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்து டெபாசிட்டை இழப்பார்கள் என்றும் அதிமுகவின் கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு செயல்படவில்லை, பாமாவிற்கு ஸ்லீப்பர்செல்லாக இருந்து கொண்டு கொள்கை பரப்பு […]
அதிமுகவின் கே.பி.முனுசாமி பாமகவுக்கு ஸ்லீப்பர்செல்லாக பணியாற்றுகிறார் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். அதிமுக – தேமுதிக காட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடித்து வந்த நிலையில், தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பது தொடர்பாக தலைவர் விஜயகாந்த் முடிவை ஏற்பதாக மாவட்ட […]