Tag: live

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த மானிய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அந்த துறை அமைச்சர் அதற்கு பதில் அளித்து வருகிறார். இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய தொழில்களுக்கு முதலீடு, புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டு […]

live 3 Min Read
Today Live 17042025

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தது போல, இன்று பள்ளியில் மாணவர்கள் வன்முறையை தடுக்கும் வண்ணம் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சரே பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற சட்டமசோதாவுக்கு […]

live 2 Min Read
Today Live 16042025

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து இன்று முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அமலில் உள்ள அந்நியர் பதிவு சட்டம் 1940-ன் படி அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் 30 நாட்கள் கால கெடுவுக்கு மேல் தங்கியிருக்கும் […]

#USA 2 Min Read
Today Live 15042025

Live : அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முதல்.., சித்திரை முதல் நாள் வரை…

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து. வருகின்றனர். பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இன்று ஏப்ரல் 14-ல் அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் […]

#ADMK 2 Min Read
Today Live 14042025

Live : அண்ணாமலையின் டெல்லி பயணம் முதல்., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசியக் குழு உறுப்பினர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று தேசிய தலைமையுடன் முக்கிய ஆலோசனைக்காக அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்மார்ட் போன், கணினி, செல்போன் கணினி உதிரி பாக்கங்கள், செமி கண்டெக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு பொருட்களுக்கு அமெரிக்கா புதியதாக விதித்துள்ள பரஸ்பர விதி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

#Annamalai 2 Min Read
Today Live 13042025

live : பரபரக்கும் வக்பு மசோதா விவகாரம் முதல்…ட்ரம்ப் போட்ட அதிரடி வரி வரை!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 4, 2025 அன்று அதிகாலை, சுமார் 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா 128 எம்.பி.க்களின் ஆதரவு வாக்குகளுடனும், 95 எம்.பி.க்களின் எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேறியது. இதனையடுத்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி […]

live 3 Min Read
live tamil news

Live : மியான்மர் நிலநடுக்க பாதிப்புகள் முதல்… உள்ளூர், உலக அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டு மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்திய பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் என்றும், அவர் புத்திசாலி என்றும் அமெரிக்க அதிபர் […]

Donald Trump 2 Min Read
Today Live 29032025

Live : அண்ணாமலை டெல்லி பயணம் முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளது தமிழக அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வாரம் பட்ஜெட் மீதான விவாதத்திற்காக கூட்டத்தொடர் தொடங்கி […]

#Annamalai 2 Min Read
Today Live 27032025

Live : நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவு முதல்.., தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் வரை…

சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இவரது மறைவுக்கு நேற்று முதலே பல்வேறு திரைபிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில் உறுப்பினர்களின் […]

#ADMK 3 Min Read
Today Live - 26032025

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். இதனை தொடர்ந்து பிரதமரை அவர் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிவர்டன் நகரத்தில் இருந்து தென்மேற்கே 170 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி […]

#Chennai 2 Min Read
Today Live - 25032024

Live : தேர்தல் ஆலோசனை அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை… 

சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் பற்றியும், புதிய வாக்காளர்களை சேர்ப்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம், கூடலூர், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. அதேநேரம், வெயிலின் தாக்கம் அடுத்தடுத்த […]

#Chennai 2 Min Read
Tamilnadu Live

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். நேற்று எதிர்க்கட்சி தலைவர் நெல்லை ஓய்வு எஸ்ஐ கொலைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை போல டெல்லியில் நாடாளுமன்றத்தில் மத்திய […]

#Chennai 3 Min Read
Live 20032025

Live : திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் முதல்.., சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள்  கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை (மார்ச் 10) முதல் ஏப்ரல் 4 வரையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அந்த கூட்டத்தில் என்னென்ன பேச வேண்டும், என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி-க்கான கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் […]

#DMK 2 Min Read
Today Live

Live : CISF-ன் 56வது ஆண்டுவிழா முதல்…, தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் வரை..,

சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக பாதுகாப்பு படையான CISF படையினரின் 56வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். இங்கு CISF வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சைக்கிள் பயணத்தையும் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு […]

#Chennai 2 Min Read
Today Live 07 03 2025

Live : முதலமைச்சரின் இந்தி திணிப்பு கண்டனம் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தேன் கூட்டில் கல் எறிவது ஆபத்து. ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோடைகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய 4 […]

#Chennai 3 Min Read
Today Live - 06 03 2025

Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…

சென்னை : மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, தமாகா, நாதக ஆகியவை பங்கேற்கவில்லை. டிரம்ப் உடனான சந்திப்பு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை டிரம்ப் நிறுத்துவதாக அறிவித்ததற்கு பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் கனிம ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளார். […]

#BJP 2 Min Read
Today live 05 03 2025

Live : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி முதல்.., மும்மொழி கொள்கை விவகாரம் வரையில்…

சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும்,  ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதுகின்றன. கடந்த 2011 உலக கோப்பை காலிறுதி போட்டிக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை ஐசிசி நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்து […]

ICC Champions Trophy 2025 3 Min Read
Today Live 04 03 2025

Live : சர்வதேச ஆஸ்கர் விருதுகள் முதல்.., உள்ளூர் அரசியல் நிகழ்வு வரையில்…

சென்னை : இன்று அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் உலகளவில் கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் இருந்து சிறப்பான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் பன்னாட்டு திரைக்கலைஞர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றனர். இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7518 பள்ளிகளை சேர்ந்த […]

11th Public Exam 2 Min Read
Today Live 03032025

Live : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் முதல்.., டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு வரை…

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி என பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் லெஜன்ஸ்கியும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிகழ்ந்த காரசார விவாதத்தை அடுத்து லெஜன்ஸ்கி இந்த நிகழ்வில் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பாக […]

Donald Trump 2 Min Read
Tamilnadu CM MK Stalin - Trump - Zelensky Meeting

LIVE : திமுக ஆர்ப்பாட்டம் முதல்..டெல்லியின் புதிய முதலமைச்சர் அப்டேட் வரை!

சென்னை : தமிழ்நாட்டு மக்களிடம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் வலிறுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் பலரும் மும்மொழி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து பேசினார்கள். டெல்லி முதலமைச்சரை தேர்வு செய்யும் முன்பே ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இன்று யார் டெல்லி முதல்வர் யார் என்பதை தேர்தலில்  வெற்றிபெற்ற பாஜக அறிவிக்கப்படவுள்ள்ளதாகவும், […]

#Chennai 2 Min Read
LIVE DMK