உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய 5-ம் வகுப்பு மாணவி. மாணவியின் கடிதத்திற்கு, பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா. கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த 10 வயது மாணவி லிட்வினா ஜோசப். இவர் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். இந்த மாணவி, ழுழு நீளத் தாளில் மடல் போல கோடுகளுக்கு நடுவே ஆங்கிலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்களின் உயிர்களை காப்பதிலும் உச்சநீதிமன்றத்தின் பங்கை செய்தித்தாள்களில் […]