டெல்லியில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது. டெல்லியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியை மீறியதை அடுத்து, அம்மாநில அரசு இ-டோக்கன்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இ- டோக்கன்களைப் பெற www.qtoken.in என்ற வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டுமென அறிவித்தது. மேலும், மதுபானம் வாங்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் வந்த மதுபானம் வாங்குமாறு டெல்லி அரசு அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் அமிர்தம் தனியார் மதுபான பாரில் குடித்த பீருக்கு கூடுதலாக 240 ரூபாய் வசூலித்ததால், வெங்கடேஷ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரித்த நீதிமன்றம் மதுபான விற்ற பாருக்கு ரூ.15,000 அபராதம் விடுத்தத, வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 பணமும், வழக்கு செலவாக ரூ.5,000 தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமிர்தம் என்ற பெயரில் தனியார் மதுபான கடை ( பார்) ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கமாக வரும் வெங்கடேஷ் என்பவர் பீர் […]