மது வாங்க வருபவர்கள் ஆர்டிபிசிஆர் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது வரை குறையாமல், நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி,கடைகள், நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு […]
டெல்லி அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கான நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு அதிகாரி கூறினார். கொரோனா வைரஸ் கட்டாயமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு, டெல்லியில் உள்ள மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்தே இருக்கும். ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் மே மாதத்தில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டபோது ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு காலை 10மணி முதல் இரவு 9 மணி வரை […]
டெல்லி ஷாப்பிங் மால்களில் அமைந்துள்ள 37 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை நெருங்கவுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு ஷாப்பிங் மால்களில் அமைந்துள்ள 37 மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது. மேலும், […]
ஆன்லைன் மது விற்பனை கோரிய மனு தள்ளுபடி. மனுதாரருக்கு ரூ. 20,000 அபராதம். ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை […]
ஆந்திர மாநிலத்தில் 13 சதவிகிதம் மதுக்கடைகளை மூட அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் மே மாத இறுதியில் 13 சதவிகிதம் மதுக்கடைகளை மூட அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அங்கு 20 சதவிகிதம் மதுக்கடைகள் மூடிய நிலையில், தற்போது மேலும் 13 சதவிகிதம் மூட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திராவில் தற்போது 3,469 கடைகள் உள்ள நிலையில், 13 சதவிகிதம் மூடப்பட்டால் 2,934 மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.
மதுபானங்களை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பச்சை, ஆரஞ்ச் மண்டலங்களில் மதுக்கடைகள் மற்றும் பான் மசாலா கடைகள் திறக்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மதுக்கடைகளை திறப்பது […]
மேற்கு வங்க மாநிலத்தில் மது பிரியர்கள் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை விநியோகிக்கக் கூடிய வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், குறிப்பாக தனிக்கடைகள் மற்றும் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பல மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடை வாசலில் மதுபிரியர்கள் வரிசையில் […]
மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதில், மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார் […]
தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு பதில் தெரிவித்தது. […]
டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டெலிவரி செய்ய முடியாது என்று தமிழக அரசு பதில். டாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டோர் டெலிவரி செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதனால் மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி […]
மும்பையில் இன்று முதல் மதுக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகளை மூடுவதற்கு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைமையாக கொண்ட மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை மும்பையில் தான் பாதிப்பு அதிகம். மும்பையில் நேற்று மட்டும் 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மும்பையில் இதுவரை 9,758 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 387 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், […]