சென்னை : வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல், மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அந்த தகவலின்படி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மது விற்பனையை மேற்கொள்ள சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் […]
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை தற்போது ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலருக்கும் நேற்று இரவு முதல் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களை அப்போது கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, இன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கொண்டே இருந்தனர். இதனால், […]
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், 25க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. உடல்நிலை மோசமடைந்த 4 பேர் ஜிப்மர் […]
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வந்த நேரத்தில் அதனை மாவட்ட ஆட்சியர் ஷ்ர்வன் குமார் மறுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதிக்கு அருகே உள்ள கருணாபுரத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரவீன், ஜெகதீஸ், சேகர் ஆகியோர்உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கண்ட 4 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியதால் தான் உயிரிழந்தனர் என பரவலான குற்றசாட்டுகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி […]
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு […]
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டாஸ்மாக் மதுபானங்களின் கொள்முதல், விற்பனை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டிருந்தார். அதனை வழங்க டாஸ்மாக் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்திருந்த உத்தரவை […]
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதற்காக கடை பொருப்பாளர்களிடம் இருந்து மொத்தமாக 4.61 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. – டாஸ்மாக் நிர்வாகம். தமிழகத்தில் டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களில் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு குற்றசாட்டுகள் நீண்ட காலமாக எழுந்துள்ளன. தற்போது இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, கூடுதல் விலைக்கு டாஸ்மாக் விற்றதற்காக இதுவரையில் 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]
புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு […]
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டம் சோட்டா பகாரி எனும் கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் குடித்து உள்ளனர். அதன் பின் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் கிராமத்தில் உள்ள ஒரு தெரு ஓரத்திலே படுத்து உறங்கி உள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களை காணாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர்களை தேடி சென்று எழுப்பியுள்ளனர். அப்பொழுது 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்து […]
கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.675.19 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாம். பொங்கலுக்கு மறு தினமான இன்று திருவள்ளுவர் […]
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.அதன்படி இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில்,டாஸ்மாக் கடைகள் செயல்படாது என […]
தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட தடையால் டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலம் – ரூ.41.45 கோடி, மதுரை மண்டலம் – ரூ.27.44 கோடி, கோவை மண்டலம் – ரூ.26.85 கோடி, திருச்சி மண்டலம் […]
மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கல்யாணிபெட்டியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறியுள்ளது. போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதே சமயம் […]
ஆக்ராவில் போலியான மது அருந்திய 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள ஆக்ரா காவல் ஆணையர், ஆக்ராவில் போலியான மது அருந்தியுள்ள 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை படி, அவர்களது உடலில் மீதைல் ஆல்கஹால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த மீதம் உள்ள இரண்டு பேரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
போலீசாரை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. சென்னையில் நேற்று இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தாறுமாறாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். கொண்டித்தோப்பு பத்மநாதன் பாயிண்ட் சாலையில் நடந்த இந்த சோதனையில் வழக்கறிஞர் காரை ஓட்டி வந்துள்ளார். கார் தாறுமாறாக வருவதை பார்த்து வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரை இயக்கியவர் குடித்து விட்டு வந்துள்ளார். மேலும், முகக்கவசம் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதனால் […]
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மது விற்பனை ஆகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி வரை,தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,இதர 27 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து,35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால்,மதுப்பிரியர்கள் உற்சாகத்துடன் மதுவை வாங்கிச் சென்றனர்.இதனால்,மதுப்பாட்டில்கள் பெருமளவில் விற்பனையாகின. […]
ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய […]
புதுச்சேரியில் ஜூன் 14-ஆம் தேதி வரை தளவுரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் மதுபான கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவு […]
ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யும் மதுபானங்களை வீட்டுக்கே சென்று வினியோகிக்க டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அளவை கணக்கில் வைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. எனவே, கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மருந்தகங்கள் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டுமென மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் சிலர் ஆர்வம் காட்டினாலும், பலர் தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என […]