தென்னாபிரிக்கா காட்டிற்குள் காரில் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு அங்குள்ள பெண் சிங்கம் ஒன்று காரின் கதவை திறந்து அவர்களுக்கு அதிர்ச்சி குடுத்தது. தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அந்த குடும்பத்தினர் காரிலிருந்து சிங்கங்களை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒரு பெண் சிங்கம், அந்த குடும்பத்தினரின் சஃபாரி வாகனத்திற்கு அருகில் நடந்து வந்தது. […]