மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் இரவில் தூங்கியபோது, மர்ம நபர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தார். கூர்மையான ஆயுதத்தால் அவரைக் குத்தினார். சயிப் அலிகானின் அலறல் சத்தத்தை கேட்டு, குடும்பத்தினர் வந்ததும் அவர் தப்பியோடி விட்டார். கத்திக் குத்தில் காயமடைந்த சயிப் கான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டில் இரவில் 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான் என்றும், […]