மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 4 பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. இந்த இடி மின்னல் காரணமாக ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன், 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர், நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பலமு என்னும் மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து கூறிய அதிகாரிகள், 37 வயதுடைய ராம்துனி மேத்தா அவரது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளார். அதுபோல சத்தர்பூர் தொகுதியிலுள்ள பிகி எனும் கிராமத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானத்தில் பலத்த […]