எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.42,500 கோடி இழப்பு! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
எல்ஐசி பங்குகள் விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது. ஐபிஓ முறையில் எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் இனி பங்குசந்தையில் விற்கலாம், அதை விரும்புவோர் வாங்கலாம். ஐபிஓவில் எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.948 ஆக நிர்ணயம் செய்த நிலையில், பங்குசந்தையில் ரூ.872 ஆக குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், எல்.ஐ,சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு […]