வீதிக்கு வீதி நூலகம் அமைக்கும் திட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிடுள்ள கோவை ஆணையர் பாலகிருஷ்ணன். வீதிக்கு வீதி நூலகம் அமைக்கும் திட்டம் என்பது ஒரு சிறந்த முயற்சிகளில் ஒன்று. முக்கியமாக இந்த திட்டம் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் நல்ல முறையில் முன்னேறுவதற்காக தொடங்கப்பட்டட்டுள்ளது என்று கோவை ஆணையர் தெரிவித்தார். கோவை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், குற்றவாளிகள் தாங்களாகவே உருவாவதில்லை அவர்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளால் மனரீதியாக பாதிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறார்கள். அதனை தடுப்பதற்காக இந்த திட்டத்தை தொடங்கியுள்ளதாக” கூறினார். […]
ப.சிதம்பரம் அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்கு தான் சென்ற அனுபவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘சென்னையில் உள்ள அண்ணா நூலகத்திற்குச் சென்றேன் உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ளன போல் நாம் பெருமைப்படக்கூடிய நூலகம் இங்கு இல்லாத நூல்களே இருக்க முடியாது என்று கூறும் […]
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்க திட்டம் என அமைச்சர் எ.வ. வேலு தகவல். மதுரை – நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டிடம் கட்டுமான பணிகளை பொதுபணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று […]
மதுரையில் நூலகம் அமைப்போம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாமல் துரோகம் செய்த அதிமுக. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்கள், மூன்றாண்டுக்கு முன் 6 கோடியில் மதுரையில் நூலகம் அமைப்போம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாமல் அதிமுக துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கரனல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் . எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோ கூடாது என்று […]
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் தமிழகத்தில் மொழியியல் நூலகம் அமைக்கப்பட்ட வேண்டும் என விசிக தலைவர் தோல்.திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் “மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் […]
சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் நடத்தி வந்த நூலகம் தீயினால் எரிக்கப்பட்ட நிலையில், கர்நாடக அரசு 8,243 புத்தகங்களை நன்கொடையாக வழங்குகிறது. கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பொது நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்நூலகத்தில்,திருக்குறள்,குரான்,பொது அறிவு உள்ளிட்ட 11,000 நூல்கள் இருந்தன. ஏப்ரல் 9-ம் […]
திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 50வது தேசிய நூலகவார விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கிளை நூலக வாசகர் வட்டம், துறையூர் காவல் நிலையம் காவல் நிலையம், சிறுவர் மன்றம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இணைந்து வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கை பயணம் தொடர என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நூலகர் பாலசுந்தரம் வரவேற்றார். பொது […]