சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் ” தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா […]
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சக அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறி சந்தோஷ் பாட்டீல் எனும் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி ராஜினாமா செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து வருகிறது. […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.மேலும், அக்கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: “அனைத்து கல்வி நிலையங்கள்,அலுவலகங்கள் என […]
சென்னை:புயல் போன்ற ‘ரெட் அலர்ட்’ சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அடிக்கடி வெள்ளம்,பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்திட வேண்டும் என்று கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
நாடு முழுவதும் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி,மக்கள் பலரும் இறந்த நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு,கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. […]
சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக தருமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் சமூக-பொருளாதார மற்றும் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் மையத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் 33 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,சாதி அடிப்படையிலான மக்கள் தொகை […]
சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. +1, +2 மாணவர்களுக்கு ஆன் லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித் தொகைக்கு தகுதி […]
சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரம் கேட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பிய சென்னை மாநகராட்சி. சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தாத தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]
பெகாஸஸ் விவகாரத்தில், 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். […]
ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு எழுதிய வேலைக்கான விண்ணப்பம் ஏலத்திற்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனரும்,தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு தனது கைப்பட எழுதி வேலைக்கு விண்ணப்பித்த,விண்ணப்பக் கடிதம் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளது.இந்த முறை என்.எப்.டி. என்ற டிஜிட்டல் டோக்கன் பதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ‘உலகின் முதல் டிஜிட்டல் ஆவணம்’ என்று கூறப்படுகிறது. விண்ணப்பம்: அந்த விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக ஆங்கில இலக்கியம் எனக் […]
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 281 ஆயுர்வேத மருத்துவர்கள் தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். 281 ஆயுர்வேத மருத்துவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தங்களை அவமரியாதையாக நடத்துவது தொடர்பாக தங்கள் வாழ்க்கையை தற்கொலை செய்து முடித்துக்கொள்ள அனுமதி கேட்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றுநோயின் போது ஆயுர்வேத மருத்துவர்களை மாநில அரசு மோசமாக நடத்துவதாக கூறியுள்ளனர். கடந்த இருவது […]
உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய 5-ம் வகுப்பு மாணவி. மாணவியின் கடிதத்திற்கு, பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா. கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த 10 வயது மாணவி லிட்வினா ஜோசப். இவர் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். இந்த மாணவி, ழுழு நீளத் தாளில் மடல் போல கோடுகளுக்கு நடுவே ஆங்கிலத்தில் உச்சநீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா தடுப்பு பணிகளிலும், மக்களின் உயிர்களை காப்பதிலும் உச்சநீதிமன்றத்தின் பங்கை செய்தித்தாள்களில் […]
26 வயதான ஸ்டீபன் கம்மிங்ஹாம், அவரது பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து வினோதமான கடிதத்தை பெற்றார்.அதில் இது ஒரு நடப்பு கடிதம் ,ஒலி பயணிக்கும் ஒரு கட்டிடத்தில் எச்சரித்ததோடு, இரவில் சத்தத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டீபன் கன்னிங்ஹாம் என்ற 26 வயது இளைஞன் தனது பக்கத்துக்கு வீட்டாரிடம் இருந்து ஒரு வினோதமான கடிதத்தை பெற்றுள்ளார். அந்த கடிதத்தை, அவரது அண்டை வீட்டார் ஸ்டீபனின் வீட்டின் கதவின் கீழ் வைத்திருந்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட ஸ்டீபன் இதுகுறித்து தனது […]
“கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,இளம் சாதனையாளர் கெவின் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கடிதம் தபோது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா தொற்றின் காரணமாக கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதே ஆன இளம் உலக சாதனையாளர் கெவின் ராகுல் என்ற சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி […]
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து 1700 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் மருத்துவமனையிலேயே வைத்துச் சென்றுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு இடங்களிலும் போடப்பட்டு கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சில போலியான கொரோனா தடுப்பூசிகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,700 கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த […]
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல். அண்ணா பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக இருப்பவர் சூரப்பா. இவருக்கு வீரப்பன் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், சூரப்பா அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை துணைவேந்தர் சூரப்பா திரும்பப் பெறக் கோரி அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் போலீசார் வழக்கு […]
புதிய கல்விக்கொள்கை குறித்து பல்கலைக்கழத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பிய யுஜிசி. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது. இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், யுஜிசி புதிய கல்வி கொளகையை விரைந்து அமல்படுத்த கோரி, பல்கலைக்கழகங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும், நவ.16-க்குள் இணையவழி கருத்தரங்கை நடத்தி, தேசிய கல்விக் கொள்கையிற் அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை […]
தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதியின் வயிற்றுக்குள் சிக்கிய தற்கொலைக்கான கரணம் கொண்ட கடிதம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் எனும் இடத்தில் உள்ள மத்திய சிறையில் அஸ்கர் அலி என்பவர் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் இவர் திடீரென சிறைக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறைக்கைதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை […]
நாளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது – முக ஸ்டாலின் அழைப்பு. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எப்பொழுதும் புகழ் மணக்கும் முப்பெரும் விழா என்று ஆரம்பித்து, மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கி, அதற்காகவே வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டுத் திராவிட இனத்தைச் சுயமரியாதை மிக்க அறிவுச் சமுதாயமாக மாற்றியமைத்த தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. […]
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட இரண்டு சகோதரர்கள். டெல்லியில் ஆர்பிட் மற்றும் அங்கிட் என்ற இரு நகைக்கடை சகோதரர்கள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் ஆர்பிட் திருமணமாகாதவர். அங்கித் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்டுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் வீட்டின் மூன்றாவது மாடியில் தற்கொலை செய்து கொண்டபோது, அவர்களது தந்தை முதல் தளத்தில் இருந்துள்ளார். இவர்களிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், தங்களது தற்கொலைக்கு காரணமாக யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால், […]