கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் […]