லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலரும் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தின் டிரைலர் அதிரடி ஆக்சன் காட்சிகளால் நிறைந்து அனைவரையையும் புல்லரிக்க வைத்திருந்தது. […]