இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப் படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்தார். மேலும் அவை வெறும் வயிற்றில் பயணிக்கும் என்றும் அவர் கூறினார். நீண்ட தூர பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற சிக்கல்களை உண்டாக்கும் என்பதால் அத்தகைய முன்னெச்சரிக்கை தேவைப்படுவதாகவும் சௌஹான் தெரிவித்தார். இந்த சிறுத்தைகள் செப்டம்பர் 17 ஆம் தேதி மத்தியபிரதேசத்திலுள்ள குனோ-பால்பூரில் உள்ள தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படும். சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் […]
மைசூர் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட 3 சிறுத்தைகள். இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் தாக்கி வருகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆன் வான் டைக் சீட்டா மையத்திலிருந்து, மைசூர் பூங்காவிற்கு மூன்று சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் இரண்டு பெண் சிறுத்தைகள் மற்றும் ஒரு ஆண் சிறுத்தை ஆகும். இதுகுறித்து அப்பூங்காவின் இயக்குனர் அனில் குல்கர்னி அவர்கள் கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்காவில் இருந்து மூன்று […]