இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் செயற்கை நுண்ணறிவு அம்சம் கண்டிப்பாக இடம்பெறுகிறது, அந்த வரிசையில் லெனோவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் மார்ச் 20 ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த எஸ்5 ஸ்மார்ட்போனின் டீஸர் ஒன்று வெளியானது, மேலும் லெனோவோ எஸ்5 ஸ்மாரட்போனில் அண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட ZUI 3.5 ஒஎஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]