நெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கினார்கள். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை இந்தச் சிலையை திறந்து […]
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா,நாகலாந்து ஆகியவைகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் ஆளும் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தோற்கடித்து பிஜேபி கூட்டணி வெற்றி பெற்றது. பின்பு திரிபுராவில் மாமேதை லெனினின் சிலை பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் தகர்க்கப்பட்டது.அப்போது பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ,தெரிவிப்பதும் பதிவிடுவதும் வழக்கம்.இந்நிலையில் அவர் “திரிபுராவில் லெனினின் சிலை தகர்க்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜாதிவெறியன் பெரியார் சிலை” என பதிவிட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு. அஸம்காரில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலையில் தலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாமேதை அண்ணல்.அம்பேத்கர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெயிண்ட் வீசியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்தும், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் திருவொற்றியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திரிபுராவில் மாமேதை லெனின் சிலை,தமிழகத்தில் பெரியார் சிலை,உத்தரப்பிரதேசத்தில் உள்ள மீரட் நகரில் அண்ணல் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தபட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள திருவெற்றியூரில் அண்ணல் அம்பேத்கர் சிலை அவமதிப்பு நிகழ்ந்துள்ளது.
திரிபுராவில் மாமேதை லெனின்,அதேபோல் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றி சேதப்படுத்திய பிஜேபி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும்,மேலும் இது குறித்து பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய என்று வலியுறுத்தி நாகையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்கள் கண்டனம் போராட்டம் நடத்தினர். அதேபோல் பாரதிதாசன் பல்கலை கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிபுராவில் லெனின் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் பேரணியாக சென்ற அக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியனர் மற்றும் மோடிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். திடீரென அவர்கள் மோடியின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி ஆர்பாட்ட்ததில் ஈடுபட்டனர். திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பாரதிய ஜனதா நாட்டில் பாசிசத்தை […]