ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக இருந்தது. காலை 7.29 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இருப்பினும், நிலநடுக்கத்தின் அதிர்வு வலுவாக இல்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை […]
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இன்று பிற்பகல் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது லடாக்கின் லேவில் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்துடன் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை, ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் இதே போல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்காக விமானம் மூலம் கொண்டு வரப்படும் தாய்ப்பால். பெற்றோர்களை பொறுத்தவரையில், தனது குழந்தைக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய தியாக மனதுடையவர்கள். லே- அறுவைசிகிச்சை மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையானது, பிறந்த அடுத்த நாளே அறுவை சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காரணம் என்னவென்றால், குழந்தையின் சுவாசக்குழாயும், உணவுக் குழாயும் ஒன்றோடொன்று இணைந்திருந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப் பெற்று […]
லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் . லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க 4 முறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர். இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் […]
சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]