நாடாளுமன்றத்தில் ஆதார் திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்….!!
ஆதார் சட்ட விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆதார் ஆணையத்துக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில், புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன்படி, ஆதார் சட்ட விதிகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் ஆகியவற்றை மீறும் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அனுமதியின்றி, மத்திய அடையாள தகவல் தொகுப்பகத்தை பயன்படுத்துதல், தகவல்களை அழித்தல் போன்றவற்றுக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகளில் […]