பெய்ரூட் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான போரானது தொடங்கியது. இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கியவர்கள் தான் ஹிஸ்புல்லா அமைப்பினர். அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் தான் இரான். ஒரு வருடமாக இவர்கள் இடையில் மாறி மாறி நடந்த தாக்குதலில், பல்லாயிரம் கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், உலக நாடுகளிடையே போர் பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கியது. ஐ.நா சபையிலும் இது குறித்த சர்ச்சைகளுக்கு இஸ்ரேல் கண்டுக்காமல் […]
பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து லெபனானில் உள்ள அதிகாரப்பூர்வ மற்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நடந்த இந்த வான்வெளித் தாக்குதலில் கட்டிடங்கள் நொறுங்கப்பட்டுள்ளது. இதன் இடிபாடுகளை அகற்றி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி லெபனானின் நடுவில் […]
பெய்ரூட் : இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் நிதி சோர்ஸ்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. அதில், தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட காரணத்தால் ஹிஸ்புல்லா அமைப்பின் பொருளாதார சோர்ஸ்கள் அழிக்கப்பட்டன. மேலும், இந்த தாக்குதலின் போது தான், ஹிஸ்புல்லா அமைப்பினர் பணம் மற்றும் தங்கம் வைத்துள்ள ரகசிய பதுங்கு குழியை இஸ்ரேல் எதிர்ச்சியாகக் கண்டுபிடித்தது. இந்த ரகசிய பதுங்கு குழி பெய்ரூட் மருத்துவமனையின் அடியில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் இந்த ரகசிய பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான […]
ஜெருசலேம் : இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பை அழிப்பதற்கு லெபனானின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனானில் நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு முதற்கட்டமாக இஸ்ரேல் இரண்டு நிபந்தனைகளுடன் அமெரிக்காவிற்கு ஆவணம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் கண்டிஷனாக, இஸ்ரேல் எல்லையில் மீண்டும் ஹிஸ்புல்லா வலிமையாக உருவெடுக்காமல் இருக்கவும், எல்லை அருகே பயங்கரவாத உள்கட்டமைப்பு மீண்டும் உருவாகாமல் இருக்கவும், இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும். மேலும், லெபனான் வான்வெளியில் இஸ்ரேல் விமானப் […]
லெபனான் : ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது, நாளுக்கு நாள் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணய கைதிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், மறுபக்கம் ஹிஸ்புல்லா அமைப்பினருடனும் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க களமிறங்கியது. மேலும், இந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்குப் போருக்கான ஆயுதம், போருக்கான தேவையான நிதியுதவி போன்ற பல உதவிகளை அமெரிக்கா இஸ்ரேலுக்குச் செய்து வந்தது. மேலும், போரில் […]
இஸ்ரேல் : கடந்த ஆண்டு அக்டொபேர்-7 ம் தேதி தொடங்கிய, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தற்போது வரை முடிவுக்கு வராமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்படி நடைபெற்று வரும் போரில் ஹமாஸ்ஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஹசன் நஸ்ரல்லாவின் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், ஹிஸ்புல்லா, […]
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது. அதன் விளைவாக, ஹிஸ்புல்லா […]
இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் ஹமாஸ், இஸ்ரேலின் மக்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அதன்பின், போர் நிறுத்த அடிப்படையில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும், மீதம் உள்ள பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் இஸ்ரேல் தற்போது இருந்து வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலாக மாறி இருக்கிறது. நேற்றுடன் (அக்-7) இந்த தாக்குதல் தொடங்கி ஒரு வருடம் […]
ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர். அதில், பலரையும் பணயக்கைதிகளாக பிடித்தும் சென்றனர், அவர்களை மீட்கும் பணியிலே தற்போது வரை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது காசா பகுதியில் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கி 1 வருடம் இன்றுடன் நிறைவடைந்த இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் ஒருமுனையில் நடைபெற்று வந்த போது மறுமுனையில் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலை தாக்கினார்கள். […]
இஸ்ரேல் : வடக்கு லெபனானின் திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் உயர் பதவியில் இருந்த சயீத் அட்டாலா அலி கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதலில் அலியின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், விடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு […]
லெபனான் : ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பிலிருந்து இதற்குப் பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை கொடுத்திருந்தது. அதன்பிறகு, முதலில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது. பின், அடுத்ததாகத் தரைவழி தாக்குதலையும் நடத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த போரில் , […]
லெபனான் : இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேலிய தலைவர்களைத் தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தீவிரமானத் தொடர் தாக்குதலை நிறுத்தாமல் நடத்தி வருகிறது. இதனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நேற்று முன்தினம் […]
லெபனான் : நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. முன்னதாக வான்வெளி தாக்குதலை தொடர்ந்த நிலையில், அடுத்ததாக தரைவழி தாக்குதலையும் தொடர்ந்தது. தற்போது, ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதில், மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் […]
லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளால் (Iran ballistic missile) தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால், இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேலின் ராணுவத் தளபதியும் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள். அதில், முக்கிய விஷயமாக ஈரான் தவறு செய்து விட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக எதிர்த்தாக்குதல் செய்வோம் […]
பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் சரியான பதிலடி தர, தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவர் காஸிம் கூறி உள்ளார். காசாவில் […]
லெபனான் : இஸ்ரேல் ராணுவமானது பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பு மீது தொடர் தாக்குதலை நடத்தி வருவது போல, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான சயீத் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகள் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரேலுக்கு சற்று அதிர்ச்சி […]
லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உயிரிழந்த பிறகு, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹசன் கலீல் யாசின் நேற்று அறிவிக்கப்பட்டார். அவர், தலைவராக அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ITF தனது எக்ஸ் பதிவில், தங்களது தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பாதுகாப்பு பிரிவு தளபதியும், நிர்வாகக் குழு உறுப்பினருமான நபில் கவுக் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெபனான் மீது, இஸ்ரேல் […]
பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த […]
லெபனான் : தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழ்ந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள நகோராவை இணைக்கும் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது, இஸ்ரேலிய ஆளில்லா விமானம் மூன்று வான்வெளி ஏவுகணைகளை ஏவியதாக லெபனான் இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை ஒரு நாளைக்கு 15 தாக்குதல்களுக்கு மேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்படுகிறது.
பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இஸ்ரேலில் இருந்து பலரை பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் இருபுறமும் போருக்கு வழிவகுத்தது. இதனால், காசாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்து […]