மகாராஷ்டிரா மாநிலம், ஷீரூர் மாவட்டத்தில் நாகர்கான் என்ற மலையடிவார கிராமம் உள்ளது. அங்குவுள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்து வந்தனர். தோட்டத்தின் மையப்பகுதியை அடைந்ததும், அங்கிருந்தவர்கள் மூன்று சிறுத்தை குட்டியை கண்டனர். இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அந்த குட்டிகளை மீட்டு அவர்கள் வைத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, குட்டிகளை தேடி தாய் வந்தது. அப்பொழுது வனத்துறையினர், தாய் நடமாடிய பகுதியில் குட்டிகளை விட்டனர்.
கழுதை புலி வருவதை கவனித்த சிறுத்தை, விரைவில் செயல்பட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு நொடியில், கழுதை புலிக்கு மேல் குதித்து ஒரு மரத்தில் ஏறி உயிர்பிழைத்தது. அந்த விடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்த், அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், “சில நேரங்களில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி ஒரு தாவல். வயதுவந்த சிறுத்தைகளை அவ்வப்போது அபாயகரமான தாக்குதல்களால் தாக்கும் ஒரே விலங்குகள் சிங்கம் மற்றும் கழுத்தை புலி மட்டுமே ஆகும். […]