வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பார் கவுன்சில் விதிப்படி, வழக்கறிஞர்கள் ஆடை விதிமுறையை பின்பற்றவில்லை என புகார் எழுந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு ஆடை […]
அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்களை நியமனம் செய்ய ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயில் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது.குறிப்பாக,பல இடங்களில் வெயில் சதத்தை தாண்டியும் சுட்டெரிக்கிறது.இதனால்,பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்நிலையில்,அதிக வெயில் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை வழக்கறிஞர்கள் சங்க கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார். எனினும்,வழக்கறிஞர்கள் கட்டாயம் கருப்பு கோட் மற்றும் […]
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 77 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்த நிலையில் பல மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், செவிலியர்கள் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கியமான அமைச்சர்கள் கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்தனர். மேலும், இந்த கொரோனா தொற்று […]
வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க தி.மு.க முடிவு எடுத்துள்ளது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் பொய் வழக்குகள், சட்ட விரோத ஜனநாயக விரோத கைது நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்கள் ஆஜராக விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நீதிமன்றங்களில் தேவையில்லா கூட்டம் தவிர்க்கப்படும். ஏற்கனவே இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு காணொளி மூலமாகத்தான் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை ஆன்லைனில் மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இதில் தொடர்புள்ள 31 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் மோதிக்கொண்ட வழக்கில் நீதிமன்ற முன்னாள் உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கருப்பன் உள்ளிட்ட 32 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில் கருப்பன் இறந்துவிட்டதால் மீதமுள்ளவர்கள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் […]
நீதிமன்றம் கோவில் என்றால் அதில் தூண்களாக செல்பட வேண்டும் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி என்று தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி நீதிமன்றம் கோவில் என்றால் அதில் வழக்கறிஞர்கள் அதன் தூண்களாக செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர் தூண்களாகிய வழக்கறிஞர்கள் குற்றப்பின்னணி இல்லாதவராகவும் வழக்காடுபவர்களுக்கும் மற்றும் நீதிமன்றத்திற்கும் மத்தியஸ்தராக இருக்க வேண்டும். மேலும் நாட்டு மக்களுக்கு விரைவான நீதி […]