ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் பெயர், கொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை அடுத்து தலைமை அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேலுமணிக்காக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதா? – கடும் எதிர்ப்பு!

வேலுமணி மீதான ஊழல் வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதற்கு கடும் கண்டனம். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு ஆஜராவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு … Read more

#BREAKING: வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு. சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதன்முதலாக, வணிக வழக்குகளை விசாரிக்கும் தனி வணிக நீதிமன்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்ட அமைச்சர் ரகுபதி, நீதிபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட … Read more

#JustNow: விசாரணையின்போது ஒழுங்கீனம் – வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிப்பு!

விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்த உயர்நீதிமன்றம்.  காணொளி வாயிலாக விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காணொளி விசாரணையின்போது பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டவரை வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே 34 நாட்களாக சிறையில் இருந்து வருவதால் தண்டனையை கழித்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்தும், சிபிசிஐடி போலீசார் … Read more

விமானத்தில் வைத்து முத்தமிட்ட ஜோடிகள் – விமான பணிப்பெண்கள் மீது புகார் அளித்த வழக்கறிஞர்!

விமானத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜோடிகள் இருவரும் முத்தமிட்டதற்கு போர்வை வழங்கிய விமான பணிப்பெண் மீது அந்த விமானத்தில் பயணம் செய்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள விமானமா பி 200 விமானத்தில் மே 20ஆம் தேதி பயணம் செய்த பாகிஸ்தானை சேர்ந்த தம்பதிகள் விமானத்தில் வைத்து பலர் முன்னிலையில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகிலிருந்த பயணிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதால் விமான பணிப்பெண்களிடம் பிற பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முத்தமிட்டு தம்பதிகள் இருவரும் விமானத்தை … Read more

தெலுங்கானாவில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் தம்பதி!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த நாகமணி எனும் பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில், இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை நாகமணி எனும் பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்ஐஆர் … Read more

படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம்!

படிக்காத வக்கீல் பதவிவகிப்பதாக வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பி சதீஷ்குமார் என்னும் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக இருக்கக்கூடிய நீதிபதி பூர்ணிமா அவர்களுக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அவர், பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் B.Com பட்டப்படிப்பை முடித்து அதன் பின் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து உள்ளதாகவும், இதை … Read more

வழக்கறிஞர்கள் கறுப்பு கோட், கறுப்பு கவுன் அணிய விலக்கு.!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணையில் கலந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் வெள்ளை சட்டையுடன் கழுத்துப்பட்டை மட்டும் அணிந்து ஆஜராக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி முறையில் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது. … Read more

#BREAKING: இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3000 நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு.!

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3,000 நிதி உதவி வழங்குவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். சட்டப் படிப்பை முடிப்பவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலம் பயிற்சி பெறவேண்டும். கிராமப்புறம் மற்றும் ஏழ்மை குடும்பத்தில் இருந்து சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றுவதற்கு 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் வறுமை நிலையிலுள்ள தோடு, சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ள … Read more

ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ். நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நீதிமதிகளை அவமதித்து பேசியதால் ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்கக்கூடாது? என்று அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ். பாரதி வன்கொடுமை தடுப்பு … Read more