மாணவர்களே…இன்று முதல் ஆன்லைன் பதிவு;ஜூலை 29 தான் கடைசி தேதி – அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இன்று முதல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு. தமிழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது. எனவே,சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள்  http://tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,ஆன்லைன் பதிவு தொடர்பான விபரங்களுக்கு இங்கே  http://www.tndalu.ac.in/pdf/2022/july/Notification_for_5_Years_Integrated_Law_Courses2021-2022.pdf பார்வையிடவும்.

எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – அம்பேத்கார் பல்கலைகழகம் ..!

3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கார் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30-ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6-ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது-முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசு திட்டங்களை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள பொருட்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.தமிழகத்தில் நடைபெற்று முடிந்துள்ள 204 அரசு பொருட்காட்சிகள் மூலம் ரூ39 கோடி லாபம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அமராவதி, பவானி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் முலம் சேலத்தில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும்.சேலத்தில் வரும் 14ம் தேதிக்குள் புதிதாக சட்டக்கல்லூரி தொடங்கப்படும், நடப்பாண்டில் புதிதாக 3 சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது … Read more