கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பவத்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் குற்றச் சம்பவம் நடைபெற்று 8 வருடங்கள் கழிந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா […]