மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, ‘மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்’ என்று எச்சரித்துள்ளார். மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க சிவாஜி பூங்காவில் நடந்த குடி பத்வா பேரணியில் உரையாற்றிய அவர்,”மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும். மும்பையில் வாழ்ந்து கொண்டே மராத்தி பேச முடியாது என்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தாய்மொழி உள்ளது. அதனை மதிக்க வேண்டும், இந்தி திணிப்பு வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக […]
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை 5 மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடைமுறையின் படி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது.இதன் பின்னர் உச்சநீதி மன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இனி, மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆங்கிலம் தவிர, இந்தி,அசாமிஸ், ஓடியா ,தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .