பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மயோட் (Mayotte) தீவானது அண்மையில் வீசிய புயலால் பெரும் பொருட்சேதத்தையும், உயிர்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளது. இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆயிரத்தை கடந்துள்ளது. இன்னும் மீட்புப்பணிகள் தொடர்வதால் உயிர்சேத எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான, மயோட் தீவானது, இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இது அந்நாட்டு தலைநகர் பாரிசில் இருந்து 5000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது ஏழ்மையான பகுதியாக பார்க்கப்படுகிறது. சுமார் […]
அசாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. தெற்கு அசாமில் கடந்த சில நாட்களில் பலத்த மழை பெய்து வந்த நிலையில், கச்சார் மாவட்டத்தில் உள்ள லக்கிபூர் பகுதிக்கு அருகிலுள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலரும் காயமடைந்த நிலையில், 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.