திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தற்போது அதிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது . அதில், மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக […]
கோவை மாவட்டம், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் இணைந்து படகு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று திறந்து வைத்தார். அங்கு பயணிகளை கவரும் விதமாக நாட்டுபுற கலைகளின் ஓவியங்கள் மற்றும் கோவையில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்களை கொண்ட பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வாலாங்குளத்தில் மாநகராட்சியுடன் […]
அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரி இரசாயன மாசுபாடு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. அர்ஜென்டினாவின் தெற்கு படகோனியாவில் உள்ள ஏரி ஒன்று திடீரென இளஞ்சிவப்பு நிறமாக மாறி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், ஏரியில் வளர்க்கப்படும் இறால்களை பாதுகாப்பதற்காக இந்த ஏரியில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளனர். இதற்காக மீன் தொழிற்சாலைகளில் […]
துருக்கியில் ஆயிரக்கணக்கான ப்ளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பறவைகள் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் கொன்யா பகுதியில் இருக்கும் இரண்டாவது பெரிய ஏரியான டஸ் ஏரியில் வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்த உவர் ஏரிக்கு வரக்கூடிய நீரை சிலர் அவர்களது பகுதிகளுக்கு திருப்பி கொண்டதால் வறண்டு கிடப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணத்தால் இந்த வறண்ட பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செல்கக் பல்கலைக்கழகத்தின் […]
திருவள்ளூர் செம்பரப்பக்கம், புழல் ஏரிகளில் இருந்து மதியம் 1 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியேற்றப்பட உள்ளது. மேலும், உபரிநீர் திறப்பின் காரணமாக கரையோர மக்களுக்கு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நாரவாரிக்குப்பம், வடகரை, புழல், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் காக்கட்டியா நகரைச் சேர்ந்தவர் சிறுமி சுமிதா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார், இந்த நிலையில் சுமிதா தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். மேலும் வெளியே சென்ற சுமிதா சில மணி நேரங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். உடனடியாக முதல்கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கினார். மேலும் ஏரிக்கு அருகில் உள்ள வடிகால் பகுதிகளில் […]
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள ஒரத்தி எனும் பகுதியை சேர்ந்தவர்கள், தர்ஷன் (8), ஆகாஷ் (11) மற்றும் எலியா (10). இவர்கள் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இவர்கள், அருகிலுள்ள குளத்தில் குளிக்க சென்றனர். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் அவரை தேடி வந்தனர். குளக்கரை அருகே பார்த்தபோது அவர்கள் அணிந்த துணி இருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் குளத்திற்குள் இறங்கி பார்த்தனர். அப்பொழுது அந்த சிறுவர்கள் குளத்தில் […]
தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள நாடியம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆடல் , பாடல் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு அதற்கு சேர்த்து வைத்து இருந்த பணத்தில் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தை தூர்வார முடிவு செய்து தூர்வாரி வருகின்றனர். 150 ஏக்கர் கொண்ட அந்தக் குளத்தை மூன்று வருடத்தில் தூர்வாரி விடுவதாக அந்த கிராம இளைஞர்கள் கூறுகின்றன. இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் , ஆடல் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்ததால் வருடத்திற்கு 3 லட்சம் […]