ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டையுடன் மற்ற சேவைகளையை இணைப்பது கட்டாயம் கிடையாது என்று நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படுமென்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில் , நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாம் பயன்படுத்தும் லைசன்ஸ் செல்லாது என அறிவிக்க இருக்கிறார்கள் அடுத்த வருடம் ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.ஒரு நாளில் சராசரியாக 32 ஆயிரம் ட்ரைவிங் லைசன்ஸ் புதிதாகவும் புதுப்பிக்கவும் செய்கிறார்கள், அதேபோல் ஒரு நாளைக்கு 42 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் புதுப்பிக்கவும் செய்கிறார்கள். இது அனைத்தையும் சரி செய்ய ஒழுங்குபடுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நாடு […]