பக்தர்கள் இன்றி நடைபெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய கொடியேற்றம். தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதுண்டு. இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி இந்த விழா நடைபெற்றது. அதே போல இந்த ஆண்டும் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி […]
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா […]
தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயம் போர்ச்சுகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். இந்த பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 437-ம் ஆண்டு திருவிழா இன்று காலை 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்த திருவிழாவின் திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழா இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து, இந்த விழாவை முன்னிட்டு 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.