லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இருநாட்டு ராணுவ கமாண்டர் 6ம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சுஷில்-மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்றுள்ள நிலையில், முதல்முறையாக மத்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா பங்கேற்று உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் […]
எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து […]
வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக வடக்கு லடாக் பகுதிக்குள் 20,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளதாகவும், இந்திய இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியை சீனா மேற்கொண்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்குள் வன்முறையினை அதிகரிக்க சீனா இராணுவம், தரப்பில் பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லடாக்கில் ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முயற்சியாக […]