பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்தி அங்கீகரித்துள்ளது பெல்ஜியம் அரசு. அந்நாட்டு அரசு கடந்த வார வெள்ளிக்கிழமை இதனை அந்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதில் 93 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். 33 பேர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. யாருமே இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதால் பாலியல் தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பாவின் […]