சீனாவில் டோயின் என்ற டிக்டாக் செயலியில் பிரபலமான பெயர் லாமு. இவர் சிச்சுவான் மாகாணத்தின் கிராமிய வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றும் லாமுவுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூகவலைதள பக்கத்தில், அவரை 7,82,000 பேர் பின்தொடர்கின்றார்கள். இந்நிலையில், லாமுவை அவரது முன்னாள் கணவர் உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினரின் கண் எதிரே, அவரது முன்னாள் கணவர் […]