டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று போலந்து நாட்டிற்க்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போலந்து நாட்டு பயணத்தை முடித்துகொன்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ரஷ்யா – உக்ரைன் […]
திங்கட்கிழமை அதிகாலை கியேவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா இன்று காலை தாக்குதல் நடத்தியது, பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரேனிய மக்களின் வலிமை மற்றும் நெகிழ்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்தது. More desperate and reprehensible Russian attacks this morning […]
உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல். திங்கள்கிழமை காலை ரஷ்யா “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் கீவ் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய உயர் அதிகாரி வெளியிட்ட முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறுகையில்,”இது அவர்களுக்கு உதவும் என்று ரஷ்யர்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த நடவடிக்கைகள் விரக்தியை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார். “எங்களுக்கு கூடிய விரைவில் வான் பாதுகாப்பு […]
போர் பதற்றம் நிலாவை வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு. உக்ரைன் தலைநகர் கீவில் இன்று மாலை முதல் வரும் 28-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று கீவ் மேயர் அறிவித்துள்ளார். போர் பட்டம் நிலவி வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது கடந்த 24 -ஆம் தேதி முதல் தொடர்ந்து 31-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. […]
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியானது.இதனையடுத்து,உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் […]
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,பல முக்கிய நகரங்களில் இன்றும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது. இதனையடுத்து,வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது எனவும்,வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தார். இதனிடையே,ஆபரேசன் கங்கா திட்டத்தின்மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள […]
தலைநகர் கீவ் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு. ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாகவும் காணொலி வாயிலாக பேசிய அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் போரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏனெனில் ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தான் கடுமையான […]