சேலத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள, 7,300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலம் அம்மாபேட்டை, புறவழிசாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது இரண்டு வாகனங்களில் வந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடியுள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த போலீசார் அந்த வாகனத்தில் சோதனை நடத்திய போது, மாட்டுத்தீவன மூட்டைகளுக்குள் குட்கா பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரூ.1 கோடி […]
காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் ரகசியமாக கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இருந்த குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவர் கடையில் குட்கா விற்கப்பட்டதை […]
குட்கா உரிமை மீறல் நோட்டீஸூக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து நீதிபதி ஏ. பி. சாஹி மற்றும் செந்தில் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு நேற்று […]
சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் ,நாட்டில் குட்கா பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும், அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு […]
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின் கீழ் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். அப்போது, முதல் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, […]