தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் குமுளியில் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழையினால் குமுளி மலைச்சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆகஸ்டில் பெய்த மழையினால் லோயர்கேம்பில் மலைச்சாலையில் சுமார் மூன்று இடங்களில் மண் சரிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாக போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. இந்நிலையில்மலைச்சாலையில் மண் சரிந்த இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்து துவக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் மீண்டும் கனமழை […]