குஜராத்தில் கள்ள காதலர்களுக்கு இடையேயான உறவு முறிவால் தாயின் அந்தரங்க வீடியோக்களை குழந்தைகளுக்கு அனுப்பிய கள்ளக்காதலன். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் தனது கணவரை பிரிந்து 15 ஆண்டுகளாக தனது 2 குழந்தைகளுடன் பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். கேட்டரிங் ஏஜென்சியில் பணிபுரியக்கூடிய இவர் நாளடைவில் ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஆகியுள்ளார். தனிமையில் இருந்த அந்த பெண்ணிற்கு ஆதரவாக இருந்ததால் இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் தவறான உறவில் இருந்துள்ளனர். […]
விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய வீட்டு வேலை செய்யும் பெண்மணி தனது எஜமானிக்கு உண்மையாக இருக்க நினைக்காமல் எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து பொறாமை பட்டுள்ளார். கணவன் இறந்த பின்பு விபசார தொழில் செய்து வந்த அந்த எஜமானிக்கு அந்த தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து பல வீடுகள் கட்டி அவருடைய மகளுக்கும் […]
சற்றுமுன் குஜராத்தில் உள்ள பரூச், சூரத் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் கடந்த சில மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் அவதிப்படுவதுடன், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவாலும் அழிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது குஜராத் மாநிலத்தில் 3.39 மணியளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தேசிய மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குஜராத்தில் உள்ள பரூச் மற்றும் […]
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது. இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பாடலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள வல்லபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பிரதர் மோடி படேலின் சிலைக்கு, மலர்தூவி மரியாதை செலுத்தி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், அவரது பிறந்தநாள் விழாவில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும், […]
குஜராத்தின் முன்னாள் முதல்வர் காலமானார். முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு சென்ற மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின், அவரது உடல் நலம் முன்னேற்றம் கண்டது. இந்நிலையில், நேற்று இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்றுமுன் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை போட்டு தள்ள நண்பனுக்கு 5000 கொடுத்த கணவர், சிறையில் உயிரிழந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள விஜாபூர் மேக் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த சுரேஷ் என்பவருக்கும் அவரது மனைவி குந்தாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டதால், சுரேஷுக்கு மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டு தனது மனைவியை போட்டு தள்ள முடிவு எடுத்துள்ளார். இதற்காக தனது நண்பர் சம்பூர் என்பவருக்கு […]
பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் குஜராத் பகுதிகளையும் இணைத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் அண்மையில் அந்நாட்டின் புதிய மேப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவின் பகுதிகளான காஷ்மீர் மற்றும் குஜராத்தில் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமாக பகுதிகளாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது நிறைவேற்றுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தானின் இந்த […]
ஊரடங்கு விதிகளை மீறி கார் ஓட்டிய எம்.எல்.ஏ அவர்களின் மகனை மடக்கி பிடித்து விசாரித்த குஜராத் பெண் காவலர் இடம் மாற்றப்பட்டுள்ளார். குஜராத்தில் இல்ல வராச்சா சாலையில் எம்.எல்.ஏவும், சுகாதாரத் துறை அமைச்சருமான குமார் கானானி அவர்களின் மகன் பிரகாஷ் கானானி அவர்கள் கடந்த புதன்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரடங்கு விதிகளை மீறி காரில் மணிக்கணக்கில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான சுனிதா யாதவ் அவர்களை […]
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரத்தில் போலீசாரை மிரட்டிய கர்ணி சேனா கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒன்றுதான் வதோதரா. இந்த நகரத்தில் உள்ள கர்ணி சேனா எனும் கட்சியை சேர்ந்த ராஜ் ஷெகாவத் மற்றும் அவரது உறுப்பினர்கள் சீன பொருட்களை விற்பனை செய்வதை எதிர்த்து வதோதராவில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், அவர்கள் உள்ளூர் செய்தி சேனல்கள் இடம் சென்று தர்மேந்திர சிங்கை […]
இந்த உலகில் உதவும் மனப்பான்மை கொண்ட பல உள்ளங்கள் இருப்பதால் தான் இன்னும் உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது. பலரும் மனிதாபிமானம் இலலாமல் போயிற்றோ என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த கேள்விக்கு பதிலாக இன்றும் பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் கல்யாண்ப்பூர் கிராமத்தில், பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தூக்கி […]
மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியில் செல்ல முடியாத நிலையில், வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மழை விடாது பெய்து வருவதால், வீடுகளும் முழ்கும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரமாக இறங்கி உள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நவ்சாரி நகரத்தில் […]
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஓவியத்தை குஜராத்தை சேர்ந்த ஓவியர் மனோஜ் அவர்கள் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைய அவர் எடுத்துக்கொண்ட காலம் 5 மாதம் ஆகும். இந்த ஓவியத்தின் அளவு 80 சதுரஅடி. இந்த ஓவியமானது உலகத்திலேயே மிகப்பெரிய கையில் வரையபெற்ற ஓவியமாகும். இந்த ஓவியம் குஜராதில் உள்ள பூஜ்-இல் உள்ளது.