தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது, புடலங்காய். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுப் பொருமல் நீங்கும். வயிற்றுப் பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான். பொதுவாக, புடலங்காயில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள, தேவையற்ற […]