கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகளை கையாளுவதில் தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அப்படியே கடலில் கொட்டுகிறார்கள் எனவும்,அணுக்கழிவுகளை கையாளுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை எனவும்,எனவே இதனை முறையாக கையாளுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து,அணுக்கழிவுகளை கையாளுவதில் முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என […]
கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணுக்கழிவுகளை அணுமின் நிலையத்திலேயே சேமித்து வைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற திமுக உறுப்பினர்(எம்பி) டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சேமிக்கப் படும் அணுக்கழிவுகளை […]
கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை மத்திய அரசு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு […]
கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி அளித்துள்ளதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற தலைவரும், நெல்லை மாவட்டம் ராதாபுரம் எம்எல்ஏயுமான அப்பாவு, கூடங்குளம் அணுக்கழிவுகளை இப்பகுதியில் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டம் நடத்தினர். மக்கள் சார்பாக நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், இல்லாதபோதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளேன். எனவே, அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி […]
மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து […]
கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.இந்த ஒப்புதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்கு,சுற்றச்சூழல் ஆர்வலர்கள்,அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,முதல் இரண்டு அணு உலைகளின் கழிவுகளை எங்கே வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2-வது அணு உலையின் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஒரிரு நாட்களில் முழுஉற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடங்குளம் வளாகத்திற்குள் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை மத்திய – மாநில அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும் . மக்கள் பாதுகாப்பு, சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை உடனடியாக கைவிட்டு, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.