கோடநாடு வழக்கு தொடர்பாக கூடலூர் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை. உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். […]